Aathichudi ஆத்திச்சூடி ஔவையாரால் எழுதப்பட்டது. இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது. ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது.. ஔவையார் பற்றி ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர். ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார். ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது. இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார். அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது. ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது. தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகைய...